சோதிடராக மாறிய ரணில் – நாளை யாரிடம் கடன் வாங்கலாம்? (வீடியோ இணைப்பு)

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கமால் நாளை எந்த நாட்டிடம் கடன் வாங்கலாம் என அரசு சிந்திக்கிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு காரணம் ராஜபக்ச குடும்பம் அனைவரும் அறிந்ததே.

நாட்டில் பொருளாதார நெருக்கடி காணப்படும் நிலையில், அரசாங்கம் வேலை தமது நண்பர்களுக்கும் சகாக்களுக்கும் பாரிய வரிச் சலுகை வழங்கியதே ஆகும்.

கிட்டத்தட்ட 6000பில்லியன் இலங்கை ரூபா இவ்வாறு வரிச் சலுகையாக வழங்கப்பட்டதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயத்தில் கைவைத்த அரசு இரசாயன உரத்தை தடை செய்து முட்டாள் தனமான வேலை செய்துள்ளது.

இதனால் பாரிய உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் நாட்டில் காணப்படுகிறது.

இதற்கு முற்று முழுதாக பதில் கூறவேண்டியது ஜனாதிபதி கோட்டபாய.

இந்த நிலையில் கோட்டாவின் மீதுள்ள களங்கத்தை துடைக்க கொண்டுவரப்பட்டவர்தான் ரணில் விக்கிரமசிங்க.

அவருடைய நடத்தை இவ்வாறு எவ்வாறு உள்ளது என்றால் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஆருடம் கேட்டு எப்படி ஆட்சி செய்தாரோ அதே போல உணவுப் பஞ்சம் ஏற்படலாம் ,போராட்டங்கள் வலுப்பெறலாம் என ரணில் கூறி வருகின்றார்.

நாட்டின் உள்ளூர் உற்பத்தியை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்று ஜோசிக்காமல் ,இன்று யாரிடம் கடன் வாங்கலாம்,அடுத்த மாதம் யாரிடம் பிச்சை எடுக்கலாம் என்று கதைக்துக் கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் என்றார்.

வீடியோ இணைப்பு

Leave a Reply