சுப்பர் டீசல் – ஒக்டென் 95 ரக பெட்ரோல் சந்தையில் 10 சதவீதம் குறைவாகவே உள்ளது! வலுச்சக்தி அமைச்சர்

சுப்பர் டீசல் மற்றும் ஒக்டென் 95 ரக பெட்ரோல் சந்தையில் நாளாந்த தேவையை விட 10 சதவீதம் குறைவாகவே காணப்படுவதாக வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரீமியம் பொருட்களின் விலையை உயர்த்துவதற்கான யோசனையை நாங்கள் ஆராய்ந்தோம்.

முக்கியதுவம் வாய்ந்த பொருட்களின் விலையை அதிகரிப்பது இதற்கு தீர்வாக அமையாது.

இது குறைந்த விலையுடைய பொருட்களுக்கு செயற்கையான கேள்வியை உருவாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply