
நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இவ்வாறான நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு துறைசார் செயற்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினர்களான மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் துவிச்சக்கர வண்டிகளில் பாராளுமன்றிற்கு வருகை தந்து எரிபொருள் விலைக்கு எதிராக கவனயீட்பு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இவ்வாறான நிலையில் எரிபொருட்களின் விலை தற்போது 420 வரை எட்டியபோது அதைச் செய்வதிலிருந்து அவரைத் தடுப்பது யார்? என பலாங்கொட கஸ்ஸப தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக கோட்டா கா கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தின் 50வது நாளான இன்றையதினம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.



