கட்டுமானத்துறையில் 80 வீதமானோர் தொழிலை இழக்கும் ஆபத்து

கொழும்பு, மே 28

நாட்டின் கட்டுமானத்துறையில், 70 முதல் 80 சதவீதமானோர் தொழிலை இழக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை தேசிய கட்டுமானத்துறை சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரையில், 90 சதவீத கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் உப தலைவர் எம்.டீ.போல் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பனவற்றுடன், அரசாங்கத்தினால், கட்டுமான நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவு செலுத்தப்படாமை என்பன இதற்குப் பிரதான காரணங்களாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply