மே 9 தாக்குதல்: ஜோன்ஸ்டனுக்கு எதிராக நீதிமன்றில் “பி“ அறிக்கை தாக்கல்

கொழும்பு, ஜுன் 01

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (01) பி அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மே 9 ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில்  மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல்களில் சந்தேக நபராக “பி“ அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி, நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டும் உத்தரவின் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply