மே-9 வன்முறை தொடர்பான சாட்சியங்கள் வழங்கி வைப்பு

கடந்த மே9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி அலரி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான சாட்சியங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் கோடா கோ கம மற்றும் மைனா கோ கம ஆர்பாட்டகாரர்களின் மீது மகிந்த ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பிலான சாட்சியங்கள் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த சாட்சியங்கள் கோடா கோ கமவின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதலுக்குள்ளான காணொளி சாட்சியங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது சில பொலிஸ் அதிகாரிகள் அதனை பார்வையிட்டதுடன் தாக்குதலை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply