பருத்தித்துறையில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்த மோ. சைக்கிள்! இரு இளைஞர்கள் படுகாயம்

கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் இன்று (02) இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் காணப்பட்ட கம்பத்துடன் மோதியதிலேயே இரு இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் மீசாலை வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதான இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

பிற செய்திகள்

Leave a Reply