மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர் உயிரிழப்பு! மூதூரில் பெரும் சோகம் 

எரிவாயுவை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி நேற்று மாலை மூதூர் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் உள்ள வீதியில் மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருத்த நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நெஞ்சுவலி ஏற்பட்டு மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மாலை 5.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

மூதூர் – ஜாயா நகரைச் சேர்ந்த 42 வயதான ஹபீப் முஹம்மது இப்றாஹீம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது ஜனாஸா இன்று வியாழக்கிழமை மூதூர் முஸ்லீம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவருக்கு 4 மற்றும் 2 வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகளும் 25 நாட்களான ஆண் குழந்தையொன்றும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, இப்றாஹீம் மக்களுக்காக போராடி உயிர் நீத்ததை பெரும் பேறாக கருதுவதாகவும், அவரது குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டிக் கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply