பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணை தொடருமா? இல்லையா என்பது குறித்து இன்று தீர்ப்பு!

மல்வானை மாபிட்டிகம பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தொடருமா? இல்லையா என்பது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது.

கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று இந்த விடயம் தொடர்பாக தீர்ப்பு வழங்கவுள்ளது.

தொம்பே, மல்வான, மப்பிட்டிகம பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து பெரிய வீடு, நீச்சல் தடாகம் மற்றும் பண்ணை ஒன்றை நிர்மாணித்து, அரசாங்க நிதியை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அவரது உறவினரான திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு மே 13ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்தது. இந்த வழக்கு அன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நாட்டில் நிலவும் மோசமான நிலைமைகள் காரணமாக உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகப் போவதில்லை என பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடருமா? இல்லையா என்பது குறித்து இன்று தீர்ப்பளிக்கப்படுமென வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply