ரஞ்சனின் விடுதலை குறித்து ரணில் விசேட பணிப்புரை

சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது குறித்து ஆராயுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி சிறைச்சாலைக்குச் சென்று ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில், தாம் பட்டப்படிப்புக்குத் தயாராகி வருவதாகவும், அதற்கென வழங்கப்பட்ட மடிக்கணினி சிறைச்சாலை அதிகாரிகளினால் மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க அவர்களிடம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி ஊடாக அழைப்புகளை மேற்கொள்வதாகக் தெரிவித்து இவ்வாறு அதனை எடுத்துச் சென்றுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் செயலாளர் சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும், ரஞ்சன் ராமநாயக்கவின் கல்வி நடவடிக்கைக்குத் தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்தி தருவதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply