யாழ். போதனாவுக்கு மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு

யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்துகளின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்துகளின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக கனடாவில் உள்ள தமிழ் அன்பர்கள் இருவரால் 260 போத்தல் பெட்டடீன் மருந்தும், குழந்தைகளுக்கான பரசிற்றமோல் சிறப் 360 போத்தல்களும் நன் கொடையாக இன்று வழங்கப்பட்டது.

இந் நன்கொடையினைத் தக்க தருணத்தில் மனமுவந்து தந்தமைக்கு வைத்தியசாலைச் சமூகம் சார்பாக நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும், சிறுவர்களுக்குத் தேவையான பரசிற்றமோல் சிறப் வெளிநோயாளர் பிரிவில் தேவையான நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் யாழ் போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. யமுனாநந்தா தெரிவித்தார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply