வட்டுக்கோட்டையில் வானில் மாணவியை கடத்த முயற்சி – பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு

வீதியில் சென்ற மாணவியை ஹைஏஸ் வாகனத்தில் கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் குழுவொன்றை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்.– வட்டுக்கோட்டை வீதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

யாழிலிருந்து வட்டுக்கோட்டையில் பஸ்ஸில் வந்திறங்கிய மாணவியை கூட்டிச் செல்வதற்காக தாயார் மோட்டார் சைக்கிளில் காத்திருந்த வேளை தாயாரின் முன்னேயே ஹைஏஸ் வாகனத்தில் மகளை கடத்த இளைஞர் குழு ஒன்று முற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்குகூடிய இளைஞர்கள் குறித்த குழுவை மடக்கிப் பிடித்ததோடு தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர்.

பின் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைதானவர்களை வட்டுக்கோட்டைப் பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அண்மைய நாள்களாக நாட்டில் சிறுவர் கடத்தல் மற்றும் கொலை ஆகியவை அதிகரித்துவரும் நிலையில் இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply