கோட்டா கோ கம தகவல் தொழில்நுட்ப மையம் நாளை திறப்பு!

அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் பகுதியில் நடைபெற்றுவரும் கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 59வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களம் தினமும் புதிய வசதிகளை உள்ளடக்கிய ஆர்ப்பாட்ட களமாக மாற்றமடைந்து வருகின்றது.

அந்தவகையில் நாளையதினம் மாலை04 மணியளவில் கோத்தா கோ கம களத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப மையம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் கணினியை பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை ஊக்குவிப்பவர்களுக்கு பயன்படுத்தப்படும் பொதுவான இடமாக இது பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply