3,182 முறை தண்டால் எடுத்து ஆஸ்திரேலிய தடகள வீரர் கின்னஸ் சாதனை

ஆஸ்திரேலியா,ஜுன் 19

ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரத்து 182 முறை தண்டால் போட்டு ஆஸ்திரேலிய தடகள வீரர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலிய தடகள வீரர் டேனியல் ஸ்கேலி செய்த சாதனையை கின்னஸ் புத்தகம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது.

இதற்கு முன் ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரத்து 54 முறை தண்டால் போட்டு சாதனை படைத்த சக ஆஸ்திரேலிய நாட்டவரை டேனியல் பின்னுக்கு தள்ளி புது சாதனை படைத்தார்.

Leave a Reply