நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் (CPSTL) செவ்வாய்க்கிழமை (28) அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (28) முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் (டாக்டர்) பந்துல குணவர்தன திங்கட்கிழமை (27) தெரிவித்தார்.

அதன்படி, பொது போக்குவரத்து, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம், ஏற்றுமதி தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் மற்றும் உணவு விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் செவ்வாய்க்கிழமை (28) முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை எரிபொருள் விடுவிக்கப்படும்.

அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மற்றும் முப்படையினரால் நிரப்பப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் விநியோகிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply