ஏ.சி அறையில் இருக்கும் பந்துல மக்களின் பரிதாப நிலையை உணர்ந்திருப்பாரா? -செல்வம் எம்.பி கேள்வி

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தொந்தரவு செய்யாமல் எரிபொருளை பதுக்கும் மாபியாக்களை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் முன்வரவேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வினியோகிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பானது குழந்தைப் பிள்ளைத்தனமானதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கடற்றொழிலாளர்கள், விவசாயிகள், உட்பட பலதரப்பினர் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவதாக செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏ.சி அறையில் இருக்கும் அமைச்சர் பந்துல குணவர்த்தன, சாதாரண மக்கள் வரிசையில் நிற்கும் பரிதாபத்தை உணர்ந்திருப்பாரா என்றும் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply