
உடப்பு,ஜீன் 28
உடப்பு பிரதேசத்தில் கிராமிய வங்கியின் கிளை முகாமையாளர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இவ்வாறு காணாமல் போனவர் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கிராமிய வங்கிக்கு சொந்தமான ஆராச்சிக்கட்டுவ பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து, திங்கட்கிழமை (27) இரவு 11 மணியளவில் வங்கியை மூடிவிட்டு முகாமையாளர் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.
எனினும் முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முந்தலம் பிரதேசத்தில் அவர் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளதாக தெரியவந்துள்ளது





