சூடானில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 25 பேர் உயிரிழப்பு

சூடான்,ஜுன் 28

தெற்கு சூடானின் Warrap மாநிலத்தில் இருதரப்பினருக்கு இடையே இடம்பெற்ற மோதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் அரச ஊழியர்கள் உட்பட 18 இராணுவ வீரர்களும் 7 பொதுமக்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அதிகாரிகள் குழுவொன்று கள விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அங்கு ஆயுதக் குழுவொன்றுடன் இடம்பெற்ற மோதலிலேயே 25 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply