“நல்லவர்களும் கெட்டவர்களாகி கொலை, கொள்ளை, களவு போன்ற செயல்களில் ஈடுபடக்கூடிய நிலையை நாடு உருவாக்கியுள்ளதாக” பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கொழும்பு – தெமட்டகொட பகுதியில் வாழும் மக்கள் தொடர்ந்து எரிபொருளுக்காக பாதையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பொதுமகன்,
பெட்ரோலுக்காக இரவு பகலாகா தெமட்டகொட ஐ.ஓ.சி முன்பாக நிற்கின்றோம். பிள்ளைகளையும் மனைவியையும் வீட்டில் தனியாகவிட்டு வருவதற்கு பயமாக உள்ளது. ஏனெனில் நாட்டின் நிலைமை அவ்வாறு உள்ளது.
பெட்ரோலின் விலை அதிகரிக்கபடுகின்றதே தவிர மக்களுக்கான பெட்ரோல் முறையாக வழங்கப்படவில்லை. பெட்ரோலை பெறுவதற்காக மூன்று வேலை உணவையும் வீட்டில் இருந்து எடுத்து வந்து இங்கு சாப்பிடு இங்கேயே உறங்கிக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலைமையை அரசாங்கம் தான் மாற்ற வேண்டும்.- என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிற செய்திகள்





