
கொழும்பு, ஜுன் 29
ஒரேநாடு ஒரே சட்டம் குறித்த ஜனாதிபதி செயலணியினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி இறுதி செய்யப்பட்ட இந்த அறிக்கையை அன்றைய தினமே ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும் குறித்த ஆனைக்குழுவின் தலைவர் ஞானசார தேரர் உள்ளிட்ட அந்த ஆனைக்குழுவின் உறுப்பினர்களினால் ஒப்படைக்கும் திகதி மறுபரிசீலனை செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த இறுதி அறிக்கையில் அதன் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.





