அரசியலமைப்பின் 22வது திருத்தம் மற்றும் 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் ஆரம்ப வரைவுக்கு அமைச்சரவை கொள்கை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் அரசியலமைப்பின் 22வது திருத்தம் மற்றும் 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் ஆரம்ப வரைவு சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்டது.
இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம்,22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அதனை நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக முன்வைப்பதற்கும் நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, அரசியலமைப்பின் 22வது திருத்தம் எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட ஏழு நாட்களுக்குப் பின்னர் பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை சமகி ஜன பலவேகய சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர்,22வது திருத்தத்தை தனியார் சட்டமூலமாகவே சமர்ப்பித்ததாக தெரிவித்தார்.
அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர், அரசாங்கத்தின் அங்கமாக அமைச்சரவையில் புதிய 22 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், தனியார் சட்டமூலமாக சமர்ப்பிக்கப்பட்ட திருத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22வது திருத்தச் சட்டம் வர்த்தமானியாக வெளியிடப்பட்டு அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிற செய்திகள்
நூற்றாண்டில் முதல் முறையாக ரஷ்யாவால் விடப்பட்ட தவறு அம்பலம்!
இலங்கையில் இனி 15 மணிநேர மின்வெட்டு! மின் பொறியியலாளர் கடும்
எச்சரிக்கை
பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஆறாவது நாடாக இணையும் ஈரான்
இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 75,000 லீற்றர் எரிபொருள் பறிமுதல்





