சிறுத்தைகளை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

மத்திய மலைநாட்டில் வாழும் சிறுத்தைகளை பாதுகாக்கும் வகையில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக விசேட வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் மூலம் மத்திய மலைநாட்டில் மலைகள் மற்றும் வனப்பகுதிகளில் வாழும் சிறுத்தைகளை பாதுகாக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. சிறுத்தைகளை பாதுகாப்பது மற்றும் ஏனைய வன விலங்குகளை பாதுகாப்பது தொடர்பாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் 1000 முச்சக்கர வண்டிகள் மற்றும் 1000 கிராம சேவகர் காரியாலயங்கள், தோட்ட அலுவலகங்கள் மற்றும் ஏனைய அரச அலுவலகங்களில் சிறுத்தைகள் மற்றும் ஏனைய வனவிலங்குகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் மற்றும் சுவரொட்டிகளை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த சிறுத்தைகள் மற்றும் பிற வன விலங்குகள் பற்றிய தகவல்களை விரைவாகப் பெறுவதே இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கம் என்று வனவிலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.

சிறுத்தைகள் மற்றும் பிற வன விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளான போதைப்பொருள், பொறி வைத்தல், துப்பாக்கிச் சூடு அல்லது வேறு குற்றச் செயல்கள் ஏதேனும் பற்றி அறிந்தால் உடனடியாக வனவிலங்கு திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1992 இற்கு அழைப்பை எடுத்து தெரிவிக்குமாறு வனவிலங்கு திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply