எரிபொருள் நிலையத்தில் திருட்டுத்தனமாக எரிபொருள் விநியோகம்

யாழ்ப்பாணம்,ஜுலை 7

யாழ் நகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு திருட்டு தனமாக டீசல் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 2 வான்கள், லொறி என்பவற்றுக்கு  டீசல் திருட்டு தனமாக டீசல் விநியோகித்துக்கொண்டு இருந்தவேளை சிலர் அங்கு கூடி நியாயம் கேட்டுள்ளனர்.

அதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் முரண்பட்டமையால் , பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி அப்புறப்படுத்தி சென்றுள்ளனர்.

Leave a Reply