இலங்கையில் பிரதான வர்த்தக பொருளாக மாறியுள்ள விறகுக்கட்டு!

உலகம் எண்மான யுகத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில் கொழும்பு நகரின் பிரதான வர்த்தக பொருளாக விறகுக் கட்டு மாறியுள்ளது.

கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு கொள்கலன்களுக்காக நிலவும் தட்டுப்பாடே இதற்கான காரணமாகும்.

கொழும்பு மாடி வீடு உள்ளிட்ட ஏனைய மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் 4 அல்லது 5 விறகுகள் அடங்கிய கட்டு ஒன்றானது 70 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில கிராம புறங்களில் வாழும் மக்கள் பாரவூர்திகள் மூலம் விறகுகளை கொழும்புக்கு கொண்டு வந்து, துண்டுகளாக்கி விற்பனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னர், சிறப்பு அங்காடிகளில் விறகுக் கட்டு ஒன்று 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

அவ்வாறான பின்னனியில் சந்தையில் மண் அடுப்புக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக மண் அடுப்பானது, சுமார் ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply