நித்தியானந்தாவிடம் சரணடைந்த கோட்டா; கைலாசாவில் இருப்பதாக கஜேந்திரன் எம்.பி அதிர்ச்சி தகவல்!(வீடியோ இணைப்பு)

நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ள ஜனாதிபதி கோட்டா ,நித்தியானந்த சுவாமிகளிடம் சென்றிருக்கலாம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ,செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சமூகம் மீடியாவுக்கு வழங்கிய விசேட நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எங்களைப் பொறுத்த வரையில் கோட்டா ஒரு கொடுமையான மனிதர்.கிட்லருக்கு பின்னர்,கருணை ,ஈவிரக்கம் இல்லாத மனிதர் அவர்.அவர் ஒரு கருணைக் கொடூரன் என்ற எண்ணம் தான் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.

இறுதிப் போரிலே வன்னி மீது பொருளாதார தடைகள் விதித்து,பெண்கள்,குழந்தைகள்,கரிப்பிணிகள் என பலரை அவர் கொன்று குவித்துள்ளார்.மக்களை எவ்வாறு கொன்றார் என்பதை வலிகளை அனுபவித்த எமக்குத் தான் தெரியும்.

இவர்களை துக்கு மேடைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் எமது கோரிக்கை.இந்த நிலையிலே அவரை தெரிவு செய்த சிங்கள மக்களே இப்போது விரட்டி அடித்துள்ளனர்.

அவர் கடலால் சென்றாரா ,விமானத்தில் சென்றாரா என்பது எமக்குத் தெரியாது.ஆனால் சிலர் சொல்கிறார்கள் அவர் கைலாசாவில்,நித்தியானந்தவிடம் சென்றுள்ளார் என்று.தமிழ் மக்களின் உயிர்த் தியாகங்கள் அவர்களை உய்ய விடாது என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply