6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம்,ஜுலை 11

எல்லை தாண்டி மீன் பிடித்த ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த 6 இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply