
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அவ்வேளையில் குடி வரவு குடியகழ்வு அதிகாரிகள் பணியை பகிஸ்கரித்ததாலும்,கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து திரும்பி வீட்டுக்கு செல்ல நேரிட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.



