நேற்று நள்ளிரவு முதல் வி.ஐ.பி. டெர்மினல் முனைய சேவையில் இருந்து அதிகாரிகள் விலகல் !

தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக விமான நிலையத்தில் உள்ள வி.ஐ.பி. டெர்மினல் முனையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சேவையில் இருந்து விலகியுள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குகாரணமான முன்னாள் அரசியல்வாதிகள் விஐபி டெர்மினல் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என ஊகிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதை தடுக்கும் வகையில் அவர்கள் கடமைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்ததாக அச்சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

Leave a Reply