எரிவாயுவிற்காக காத்திருந்த நபர் மரணம்!

கொட்டாவை பஸ் தரிப்பிட நிலையத்திற்கு அருகில் சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்தார்.

கொட்டாவை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய குடும்பஸ்த்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த நபர் இன்று முற்பகல் சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக கொட்டாவை நகருக்கு வருகை தந்து வரிசையில் காத்திருந்த நிலையில், சுகயீனம் காரணமாக கொட்டாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை கொட்டாவை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply