அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது! இலங்கை திருச்சபை விடுத்துள்ள கோரிக்கை

அதிகாரங்களை எதிர்பார்ப்பவர்கள், மாற்றத்தைத் தேடும் இளைஞர்கள், அமைதியைப் பேண எதிர்பார்க்கும் பாதுகாப்புப் படையினர், காவல்துறையினரிடம் இருந்து பொறுப்பான நடத்தையை இலங்கை திருச்சபை கோரியுள்ளது.

இலங்கை திருச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது.

நாடு கடத்தப்பட்ட ஒரு ஜனாதிபதி, களத்தில் ஒரு பதில் ஜனாதிபதி மற்றும் முற்றுகையின் கீழ் ஒரு பிரதமர் இருப்பது போல் தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போதைய நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஒருமித்த கருத்தை எட்ட முடியாமல் நாடாளுமன்றம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கவோ அல்லது அமைதியான கூட்டத்திற்கு தீங்கு விளைவிப்பதற்கோ – என்றும், இலங்கை திருச்சபை வலியுறுத்தியுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply