
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் வீதி முதலாம் கட்டையிலுள்ள உணவக வளாகத்திலிருந்து, நேற்று கைக்குண்டு மீட்கப்பட்டது.
உணவகமொன்று அமைந்துள்ள காணி வளாகத்தில் காணப்பட்ட கறையான் புற்றினை வெட்டிய போதே, குறித்த கைக் குண்டு அடையாளம் காணப்பட்டது.
இது குறித்து காணி உரிமையாளர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில், பொலிஸார் கைக்குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பிறசெய்திகள்




