அமைதியான அதிகாரத்தின் மூலமே மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்!

அமைதியான அதிகாரத்தின் மூலமே மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலிசங் தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது. நடைபெறும் அனைத்து வகையான வன்முறைகளையும் கண்டிக்கின்றோம்.

நீண்ட கால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக அனைத்து தரப்பினரும் விரைந்து செயற்பட வேண்டும்.

பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, ஜனநாயக நிர்வாகம் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான மக்களின் கோரிக்கைகளை ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் அமைதியான அதிகாரப் பரிமாற்றத்தின் மூலம் மாத்திரமே அடைய முடியும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது ருவிற்றர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply