இலங்கையின் நிலைமையை ஐ.நா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது!

இலங்கையின் நிலைமையைத் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், “நான் இலங்கையின் நிலைமையைத் தொடர்ந்து கவனித்து வருகின்றேன். மோதலுக்கான அடிப்படைக் காரணங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது முக்கியமானதாகும். அமைதியான மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான சமரச மனப்பான்மையை ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply