பாரிய சிரமத்திற்கு மத்தியில் உயிருடன் மீட்கப்பட்ட முதலை

புத்தளம் – சாலியவெவ பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்த முதலையொன்றை அவதானித்த அப்பகுதி மக்கள், கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கிணற்றுக்குள் வீழ்ந்த முதலையை பாரிய சிரமத்திற்கு மத்தியில் உயிருடன் மீட்டுள்ளனர்.

இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்ட முதலை தப்போவ குளத்தில் விடுவிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ராமன்சிங்ஹ தெரிவித்தார்.

குறித்த முதலை சுமார் 10 நீளமுடையதுயெனவும் 250 கிலோ எடைக் கொண்டதுயெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply