சிங்கப்பூரில் அடைக்கலம் புகுந்தார் ‘சுற்றுலா மன்னன்’

கோட்டாபய ராஜபக்ஸ, சிங்கப்பூரில் அடைகலம் கோரியுள்ளதாக தெரிய வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயணித்த SV-788 விமானம் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலைத்தீவிலிருந்து இன்று புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அவரது பாரியார் மற்றும் அவரது இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளனர்.

சவுதி அரேபியா விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக, அவர் சற்று முன்னர் சிங்கப்பூரை சென்றடைந்துள்ளார்.

அதுமாத்திரமன்றி, சிங்கப்பூரிலிருந்து தனி விமானத்தின் மூலம் உகண்டா நோக்கி செல்லவும் சாத்தியம் உள்ளதாக தெரிய வருகின்றது.

சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திலேயே கோட்டாபய சிங்கப்பூர் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply