நாட்டின் ராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பு,ஜுலை 14

சட்டம் ஒழுங்கை  பேணுவதன் நிமித்தம், வன்முறையாளர்கள் மீது பலப் பிரயோகம் செய்யவும் மக்களை கட்டுப்படுத்தவும் பூரண அதிகாரம் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் அளிக்கப்பட்டுள்ளதாக  ராணுவம் அறிவித்துள்ளது.

அதன்படி வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த வேண்டி ஏற்படும் என ராணுவம் எச்சரித்துள்ளது.

விசேட அறிக்கை  அறிக்கை மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துகின்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரச சொத்துகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபடும் என்றும் ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிராபத்துகளை கட்டுப்படுத்த வேண்டியது ராணுவத்தின் பொறுப்பு . அதற்காக  பாதுகாப்பு தரப்பினரும் பொலிஸாரும் இணைந்து கடமையில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply