யாழில் புகையிரத விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம்,ஜுலை 14

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறையில் இருந்து, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்துடன் கந்தர்மட பகுதியில் இருந்த புகையிரத கடவையில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் மோதியே உயிரிழந்துள்ளார்.

யாழ்பபாணம் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மகேந்திரசா (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.

Leave a Reply