நாடு மூடப்படும் அபாயம்- மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

நாட்டில் ஸ்திரமான அரசாங்கமொன்றை விரைவில் ஏற்படுத்தாவிட்டால், நாடு மூடப்படும் அபாயம் உள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் திரு.நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் மேலும் பணியாற்றுவது நிலையான நிர்வாகத்தைக் கொண்டிருப்பதில் தங்கியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

நாட்டில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு போதிய அன்னிய செலாவணியை வழங்குவது கூட நிச்சயமற்றதாகிவிட்டதாகக் கூறும் அவர், பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் பொது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply