அரசாங்கம் இல்லையென்றால் எதிர்கொள்ளக் கூடிய நிலைமைகள்: மத்திய வங்கி ஆளுநர்

கொழும்பு, ஜுலை 15

இலங்கையில் நிலையான அரசாங்கம் ஒன்று விரைவாக அமைக்கப்படா விட்டால் நாடு செயலிழக்க நேரிடும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

எதிர்காலத்தில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கைக்கு போதுமான அந்நியச் செலாவணி கிடைக்குமா என்பதில் பெரும் நிச்சயமற்ற நிலை நிலவுவதாக பிபிசி செய்தி இரவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிகளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் நிலையான அரசாங்கத்தை நியமிப்பதிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply