ஜனாதிபதி பதவிக்களத்தில் டலஸ் அழகப்பெரும!

வெற்றிடமாகியுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மக்கள் தொடர்பில் சிந்திக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

வளமான எதிர்காலத்திற்காக, சிறந்த அரசியல் கலாசாரத்தை ஸ்தாபிக்கும் வகையில், பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய தற்போது பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ள நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவிக்கு தாம் போட்டியிடவுள்ளதாக டலஸ் அழகப்பெரும தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply