பிற நாடு எமது நாட்டை ஆட்சி செய்வது வெகுதொலைவில் இல்லை! – அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இனிவரும் ஆட்சியாளர்கள் நாட்டினை பின்தள்ளி போக விடாது பாதுகாக்க வேண்டும், இல்லையென்றால் பிற நாடுகளிடம் மண்டியிட்டு, எமது நாட்டினை பிற நாடு ஆட்சி செய்வது வெகு தொலைவில் இல்லை என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சி தலைவர் ஜெயேந்திரன் தெரிவித்தார்.

யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டை விட்டு கோட்டாபய ராஜபக்ஷ ஓடி விட்டார். இதிலிருந்து தான் ஒரு பொறுப்பில்லாத ஜனாதிபதி என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் அரசியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தினரை காப்பாற்ற வந்த ரணில் விக்கிரமசிங்க இன்று யாப்பு விதிக்கு அமைய பதில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்னும் ஒரு வாரத்தில் பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார். தெரிவு செய்யப்படுபவர் யாராக வேண்டுமென்றாலும் இருக்கட்டும்.

ஆனால் இக்கட்டான நிலையிலுள்ள நாட்டினை எவ்வாறு கட்டியெழுப்ப போகிறார்கள் என்ற தீர்வு திட்டத்தினை உருவாக்க வேண்டும்.

பாராளுமன்றத்திற்கு கூட்டுப்பொறுப்பு ஒன்று உள்ளது. எனவே சரியான நபரைத் தெரிவு செய்ய வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி இனியாவது நாட்டினை பின்தள்ளி போக விடாது பாதுக்காக்க வேண்டும்.

எனவே கடமைகளை செய்ய தவறினீர்கள் என்றால் பிற நாடுகளிடம் மண்டியிட்டு, பிற நாடு எமது நாட்டினை ஆட்சி செய்வது வெகு தொலைவில் இல்லை.- என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply