ஜனாதிபதி, பிரதமர் தெரிவில் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது! செல்வம் எம்.பி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி, பிரதமர் தெரிவில் கலந்து கொள்ளாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் தெரிவில் பங்குகொள்ளாது. இது பற்றி இன்று எதிர்க்கட்சித் தலைவருடன் இடம்பெற்ற கூட்டத்தில் நாம் தெரிவித்திருக்கின்றோம்.

பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது அவர்களது கடமை. இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத காரணத்தால் தான், நாட்டின் பிரச்சினையும் இப்போது தீர்க்க முடியாததாக மாறி விட்டது.

எங்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தவர்கள் ராஜபக்சக்கள். அவர்கள் இப்போது சிங்கள மக்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் நிபந்தனைகளுடன் நாம் ஆதரவு வழங்குவது தொடர்பில் சிந்திப்போம். பிரதமர், ஜனாதிபதி தேர்வில் நாம் மட்டும் விலகி நிற்கவில்லை. விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமாரின் கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளோம்.

அத்துடன் இனி வரும் பாராளுமன்ற அமர்வுகளில் எமது இனப்பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் ஆவணங்களை சமர்பிக்கவுள்ளோம். யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பிலும் நாம் இன்னும் இறுதி முடிவுகளை எடுக்கவில்லை. இனியும் நாம் ஏமாறத் தயாராகவில்லை. ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்தும் இது பற்றி கதைத்து முடிவு எடுப்போம்.- என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply