முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மனைவி அயோமா ராஜபக்சவுடன் சிங்கப்பூர் Changi விமான நிலையத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் கொள்வனவில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை விமான பயணி ஒருவர் எடுத்துள்ளதாக டெய்லி ஓ என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.
எனினும் கோட்டாபய ராஜபக்சவின் இந்த புகைப்படத்தின் உண்மை தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.
கோட்டாபய ராஜபக்ச நேற்று மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.
இலங்கையில் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி நடத்தப்பட்ட போராட்டங்கள் வலுவடைந்ததை அடுத்து அவர் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலை தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கிருந்து அவர் சவுதி அரேபியாவுக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூர் சென்றார். ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பி வைத்ததுடன் அவரது பதவி விலகல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பிறசெய்திகள்



