நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் தளம்பல் நிலைமையில் இருந்து மீள்வதற்கு உறுதியானதும் நிலையானதுமான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை மீள செயற்படுத்துவதற்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை உறுதி செய்வதற்கும் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டின் ஊழல் நிறைந்த மற்றும் தோல்வியடைந்த அரசியல் சூழ்நிலையை மாற்றுவதற்கு மக்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதன் ஊடாக எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு மக்கள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மக்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை சில தனி நபர்களும் அரசியல் கட்சிகளும் தமது ஆதரவுடன் இடம்பெற்றதாக முத்திரை குத்த முனைந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நிலையான தீர்வுகளை முன்வைக்கவோ அது தொடர்பில் கலந்துரையாடவோ எவரும் முன்வராத நிலைமையே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிறசெய்திகள்



