பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் யாழில் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்ட வேளை அவர் திருடியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார்கள் இரண்டு அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார்களில் ஒரு மோட்டாரினை அதன் உரிமையாளர் தகுந்த ஆதாரங்களை காட்டி பெற்றுச் சென்றுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வட்டுக்கோட்டையில் இரண்டு பல்பொருள் வாணிபங்கள் உடைத்து திருட்டில் ஈடுபட்டவர் என வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply