ஏழு இலங்கையர்கள் இன்றும் தமிழ்நாட்டில் தஞ்சம்!

மன்னாரில் இருந்து இன்று 7 பேர் தமிழ் நாட்டின் தனுஸ்கோடியை அண்டியுள்ள தீடையை சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து தொடர்ந்தும் பலர் தமிழ் நாட்டிற்கு அகதிகளாகச் செல்லும் நிலையில் இன்றும் 7 பேர் அகதிகளாகச் சென்றடைந்துள்ளனர்.

இவ்வாறு சென்றடைந்த அகதிகளை இந்திய கரையோர காவல்படையினர் மீட்டு மரையன் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிசாரின் விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்கள் அகதிகள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply