தொடரும் எரிபொருள் நெருக்கடி; திருமண நிகழ்வில் மணமகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கறுப்புச் சந்தையில் சுமார் 2000 ரூபாவிலிருந்து 5000 ரூபா வரை ஒரு லீற்றர் பெற்றோல் விற்கப்பட்டு வருகுகின்றது.

இந்த நிலையில் புத்தளம் தில்லையடியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் மணமகனுக்கு பெற்றோல் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இவ்வாறு மணமகனுக்கு பெற்றோல் அன்பளிப்புச் செய்யப்பட்டமை சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

மணமகனுக்கு பெற்றோல் அன்பளிப்பு வழங்கிய நபர் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் தேடி 3000 ரூபாவிற்கு கறுப்புச் சந்தையில் கொள்வனவு செய்ததாக இதன்போது தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply