நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: கரு ஜயசூரிய

கொழும்பு, ஜுலை 16

நாட்டில் காணப்படும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவராக செயற்படும் அவர் ஊடக அறிக்கையொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு மக்கள் விரும்பும் முக்கிய அரசியல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தற்போது நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும் காலதாமதமின்றி, குறித்த நடவடிக்கைகளை மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படுத்துவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மக்களின் எதிர்பார்ப்புகளை தாமதமின்றி நிறைவேற்ற அரசாங்கத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

Leave a Reply