பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று

பாராளுமன்றம் இன்று  ( சனிக்கிழமை )   சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகளுக்காக மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.

மேலும்  ஜனாதிபதி பதவி வெற்றிடமாக இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளமை  குறிப்பிடதக்கது
இதேவேளை  நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் இரண்டு பிரதான நுழைவு வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன .

இதன்காரணமாக  வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு  போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தல்  விடுத்துள்ளனர்

Leave a Reply