
கொழும்பு, ஜூலை 16
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம்
கொண்ட 7ஆவது ஜனாதிபதியாக பதவி
வகித்த ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷவின் பதவி விலகளை
உத்தியோகபூர்வமாக சபாநாயகர் மகிந்த
யாப்பா அபேவர்தன அறிவித்த நிலையில்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்
ஜூலி சுங்கும் அது தொடர்பில்
அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில்
ஒரு குறிப்பைப் பதிவிட்ட அவர், ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஷவின்
வெளியேற்றத்துடன், இலங்கைப்
பிரஜைகள் இனி அனைத்து
தரப்பினருடனும் ஒத்துழைக்க வேண்டும்
என்று கூறுகிறார்.
சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதில்
கவனம் செலுத்த வேண்டும் எனவும், அதன்
மூலம் நாட்டின் பொருளாதார
ஸ்திரமின்மையை தீர்க்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் எனவும் அவர்
விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை மக்களின் ஜனநாயக
அபிலாஷைகளுக்கு அமெரிக்க அரசாங்கம்
அர்ப்பணிப்புடனும், கூடியளவு கவனம்
செலுத்துவதாகவும் ஜூலி சங் மேலும்
குறிப்பிட்டுள்ளார்.



